யாழில் விடுதலைப்புலிகளின் பாரிய பதுங்கு குழிக்கு ஏற்பட்டுள்ள நிலை

30

யாழ்ப்பாணம் – மானிப்பாய், செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் பாரிய பதுங்கு குழி அழிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை தொடர்ந்து, பிரதேசசபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிய வாகனங்களின் உதவியுடன் குறித்த பதுங்கு குழி அழிக்கப்பட்டுள்ளது.

இந்த பதுங்கு குழியில் இருந்து மீட்கப்பட்ட பாரிய இரும்புகள், இப்பிரதேசங்களில் உள்ள மயானங்களின் அபிவிருத்திக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்திற்கு பின்புறமாக விடுதலைப்புலிகள் பாரிய பதுங்கு குழி ஒன்றை அமைத்திருந்தார்கள்.

தற்போது குறித்த பதுங்கு குழியில் மழைக்காலங்களில் நீர் நிரம்பி காணப்படுவதுன், டெங்கு பரவுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதாரப் பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பதுங்கு குழியை நேரில் சென்று பார்வையிட்ட சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், இந்த பதுங்கு குழிகளை அழிக்க அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE