இயேசு பிறந்த நாளில் ரயிலில் பிறந்த குழந்தை: பிரசவம் பார்த்த பொலிஸ் (வீடியோ இணைப்பு)

97

 

அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ்காரர்கள் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிலடெல்பியா சுரங்க ரெயில் நிலையத்தில் கடந்த வியாழன் மாலை 5.50 மணிக்கு, பணியில் இருந்த டேனியல் கேபன், டேரல் ஜேம்ஸ் இருவருக்கும் ஒரு அவசரமான அழைப்பு வந்தது.

உடனே இருவரும் அவசர அவசரமாக அந்த சுரங்க ரெயிலில் ஏறியபோது, குழந்தையின் தலை வெளியே தெரியும் நிலையில், பிரசவ வேதனையில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக அங்கிருந்த நிலையைப் புரிந்து கொண்ட கேபன், சுற்றியிருந்தவர்களை விலக்கி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவசரஊர்தியை வரவழைத்த பொலிசார், வெள்ளிக்கிழமை காலை அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாயும் சேயும் தற்போது ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்ததால் கிறிஸ் என்று பெயர் வைத்திருப்பதாக, குழந்தையின் தாய் யான் ஜின் லீ தெரிவித்துள்ளார்.

SHARE