‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா

106
‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
மாதேஷ் டைரக்டு செய்துள்ள ‘மோகினி’ படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்து இருந்தார். அது, ஒரு திகில் படம்.
மோகினி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது பற்றி உதவியாளர்களுடன் டைரக்டர் மாதேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் திட்டமிட்டபடி, ‘மோகினி-2’ படத்தை எடுத்தால், நிச்சயமாக நான் கதாநாயகியாக நடிப்பேன் என்று திரிஷா கூறினார்.
திரிஷாவுக்கு பேய் நம்பிக்கை இருக்கிறதாம். ஆனால், பேயுடன் எந்த அனுபவமும் இல்லை…பேயை பார்த்தால் பயந்து ஓட மாட்டேன்’’ என்று அவர் கூறுகிறார்.
திரிஷா நடிக்க விரும்பும் இன்னொரு வேடம், சரித்திர கால நாயகி. ‘பாகுபலி’ அனுஷ்கா மாதிரி, ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய நீண்ட கால ஆசையாம்.
SHARE