மிகப்பெரிய இழப்பை சந்திக்கின்றது பேஸ்புக்

70

பேஸ்புக் நிறுவனத்தின் முன்னணி சட்டத்தரணி ஒருவர் பணியிலிருந்து விடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலின் ஸ்ரெட்ச் எனும் சட்டத்தரணியே இவ்வாறு இடைவிலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் அண்மையில் பேஸ்புக் நிறுவனம் சந்தித்திருந்த மிகப்பெரிய சட்டச் சிக்கலான கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா விவகாரம் தொடர்பில் வாதாடியிருந்தார்.

பேஸ்புக் நிறுவனமாது தனது தலைமை அலுவலகம் அமைந்துள்ள கலிபோர்னியா மெலன் பார்க்கில் இருந்து பணிபுரியக்கூடிய சட்டத்தரணி ஒருவரை எதிர்பார்த்துள்ளது.

எனினும் ஸ்ரெட்ச் வாஷிங்டனை தளமாகக் கொண்டே கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இதன் காரணமாகவே புதிய ஸ்ரெட்ச் பணியிலிருந்து இடைவிலகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE