முதல் பந்திலேயே அவுட்டான தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்: பின்னர் என்ன நடந்தது தெரியுமா?

104

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் இரண்டாவது நாளின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்டான நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 395 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தெரிவு செய்தது.

இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 299 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் (82), ஹர்திக் பாண்டியா (33) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து இரண்டாவது நாளின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின் வந்த கருண் நாயர் (4), ரவிந்திர ஜடேஜா (15) ஏமாற்றினர். ஹர்திக் பாண்டியா (51) அரைசதம் அடித்து கைகொடுத்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 395 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய எசக்ஸ் அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 237 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

SHARE