மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி

21

அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதருஸ்வல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

விபத்தில் உயிரிழந்தவர் பதவி, ஸ்ரீபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

மோட்டார் சைக்கிளொன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதையடுத்து லொறியொன்றும் குறித்த வாகனங்களுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதியையும் லொறியின் சாரதியையும் கைதுசெய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE