100 பந்து கிரிக்கெட் போட்­டியில் 12 வீரர்கள் துடுப்­பெ­டுத்­தா­டு­வார்கள் என்ற செய்தி முற்­றிலும் பொய்

110

“100 பந்து கிரிக்கெட் போட்­டியில் 12 வீரர்கள் துடுப்­பெ­டுத்­தா­டு­வார்கள் என்ற செய்தி முற்­றிலும் பொய்” என்று இங்­கி­லாந்து கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது.

டெஸ்ட் கிரிக்­கெட்­டில்தான் வீரர்­களின் உண்­மை­யான திற­மை­களைக் கண்­ட­றிய முடியும் என்­பதால் டெஸ்ட் கிரிக்கெட் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருந்­தது. கிரிக்கெட் தொடங்­கிய காலத்தில் எத்­தனை நாட்கள் ஆனாலும் இரண்டு இன்­னிங்ஸ்களை முடித்தே தீர வேண்டும்.

நாள­டைவில் அது 6 நாட்­க­ளாக குறைந்து தற்­போது 5 நாட்­க­ளாக உள்­ளது.

காலங்கள் மாற­ – மாற கிரிக்கெட் ரசி­கர்கள் 5 நாட்கள் மைதானம் சென்று போட்­டியைக் காண விரும்­ப­வில்லை. இதனால் ரசி­கர்­களை ஈர்க்கும் வகையில் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி தொடங்­கப்­பட்­டது.

இது நாள­டைவில் 20 ஓவர்கள் போட்­டி­யா­கி­யுள்­ளது. இதற்கு ரசி­கர்­க­ளி­டையே பெரும் வர­வேற்பு கிடைத்துள்ளது.

இந்­நி­லையில் இங்­கி­லாந்து கிரிக்கெட் சபை 100 பந்­துகள் போட்­டியை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ளது. இப் போட்­டியில் 12 வீரர்கள் விளை­யா­டு­வார்கள் என்று கூறப்பட்டது தான் உச்­சக்­கட்டம்.

தற்­போ­தைய நிலையில் மாற்று வீரர் களத்­த­டுப்பு செய்­யலாம். பந்து வீசவோ, துடுப்­பெ­டுத்­தா­டவோ முடி­யாது. ஆனால் 100 பந்­துகள் போட்­டியில் துடுப்­பா­டவும் செய்­யலாம் – பந்தும் வீசலாம் என்­பது நடை­மு­றைப்­ப­டுத்தப்பட இருப்­ப­தாக கூறப்­பட்­டது.

இந்­நி­லையில் இங்­கி­லாந்து கிரிக்கெட் சபையின் செய்தித் தொடர்­பாளர் இச் செய்­தியை முற்­றிலும் மறுத்­துள்ளார். ‘‘100 பந்து கிரிக்கெட் தொட­ருக்­கான முழு வடி­வமானது இன்னும் உரு­வாக்­கப்பட­வில்லை.

ஏராளமான பரிசோதனைப் போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

SHARE