ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கைது

20

கிராண்பாஸ் நகரில் மிக நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை இன்று கிராண்பாஸ் சந்தியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது கிராண்பாஸைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 10 கிராம் 360 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் பக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று கிராண்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் கிராண்பாஸ் பொலிஸார் அவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE