கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 177. 28 மில்லியன் ரூபா நிதி

24

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இந்த ஆண்டு 177. 28 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று 49 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலயக்கல்வித் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி சார் அபிவிருத்திகளுக்கு பல்வேறு நிதியுதவிகளுடன் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டில் 49 திட்டங்களுக்காக 177.28 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதனூடாக பல்வேறு அபிவிருத்திவேலைகள் இடம்பெற்று வருகின்றன.

மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 54.02 மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் அமைத்தல், வலயக்கல்வி அலுவலகம் அமைத்தல் போன்ற 5 செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீ.வி.ஜீ நிதியின் மூலம் பொருட்கொள்வனவுகள் 3.26 மில்லியன் செலவிலும் அபிவிருத்தி வேலைகள் 2.10 மில்லியன் ரூபா செலவிலும் 41 வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ரீ.எஸ்.ஈ.பி திட்டத்தின் கீழ் அதிபர் விடுதி அமைத்தல் அக்கராயன் ஆசிரிய மத்திய நிலையம் அமைத்தல் போன்ற இரண்டு திட்டங்கள் 111.80 மில்லியன் ரூபா செலவில் இடம்பெற்றுள்ளன.

ஒணர் திட்டத்தின் கீழ் முழங்காவில் ஆரம்ப வித்தியாலயத்தில் வகுப்பறைக் கட்டடம் அமைத்தல் வேலைத்திட்டம் 6.10 மில்லியன் ரூபா செலவிலும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

SHARE