418 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில்

25

இந்தியர்கள் 418 மீனவர்கள் உட்பட 471 பேரை பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாகிஸ்தான் சிறைகளில் 418 மீனவர்கள் உட்பட 471 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ள இவர்கள் பாகிஸ்தான் கடல் மற்றும் நிலப்பகுதி எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் எனவும். இதேபோல் இந்திய சிறைகளில் 108 மீனவர்கள் உள்பட பாகிஸ்தானை சேர்ந்த 357 பேர் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நல்லிணக்க அடிப்படையில் 31 மீனவர்கள் உட்பட 114 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா விடுவித்தது.

அதேபோல் 941 மீனவர்கள் உள்பட 951 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. சிறை கைதிகளுக்கான பாகிஸ்தான்- இந்தியா நீதித்துறை குழு 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த குழு 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லை என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE