400 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

17
நோட்டன் பிரிட்ஜ்  நிருபர் மு.இராமச்சந்திரன் 

சுயதொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் விவசாய தொழில் உபகரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு லிந்துலை மைசாலை சந்தியில் இடம்பெற்றது.
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் 9 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினருமாகிய வேலு சிவானந்தன், அக்கரப்பத்னை பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன் ஆகியோரின் தலைமையில் 29.07.2018 இடம்பெற்ற இந் நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேசசபை ராணிவத்தை வட்டாரத்திற்குட்பட்ட கிராமம் மற்றும் தோட்டங்களை சேர்ந்த 400 பயனாளிகளுக்கு விவசாயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமாகிய  பா.சிவனேசன், நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன்
உட்பட பிரதேச அமைப்பாளர்கள் தலைவர்கள் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
SHARE