தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?இதை செய்யுங்க

36

புல்வகையைச் சார்ந்த சிறுசெடிகளில் ஒன்றான அருகம்புல் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதற்கு அருகு, பதம், தூர்வை போன்ற பெயர்களும் உண்டு.

நமது உடல் தினமும் புத்துணர்வுடன் இருக்க தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து அருகம்புல் சாற்றில் அதிகமாக இருப்பதால் தினமும் இந்த சாற்றை பாலில் கலந்து குடிக்கலாம்.

உடல் வெப்பத்தை அகற்றவும், சிறுநீரை அதிக அளவில் பெருக்கவும், உடலைப் மிக வலிமயாக பலப்படுத்தும், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றவும் அருகம்புல் உதவுகின்றன.

அருகம்புல் சாறு தினமும் அருந்தி வர வாயுத் தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் தீர்க்க முடியாத பிரச்னைகள் மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்றவற்றைக்கு அருகம்புல்சாறு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி. ஆகியவற்றுடன் ½ தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் குணமாகும்.

நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்த அருகம்புல்லின் இலைப் பச்சையத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் பெரிதும் உதவுகின்றன.

வெட்டுக் காயங்கள் ஏற்படும் போது அதன்மீது சிறிதளவு அருகம்புல் இலையை அரைத்து பூசிவர அவை விரைவில் குணமாடையும்.

SHARE