ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு!!!

36

இரண்டு இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக  பெற்ற குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரை  எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து  இலஞ்ச பணத்தை  பெற்றுக் கொள்ளும் போது குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE