மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சிறப்பு நிகழ்வகள்

75
-மன்னார் நகர் நிருபர்-
மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் புதிய ஆரம்ப பிரிவு வகுப்பறைக்கட்டடம் திறப்பு விழா,புதிய ஒன்று கூடல் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு போன்றவை இன்று திங்கட்கிழமை(30) காலை 9.30 மணியளவில் பாடசாலையில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பிதியுதீன்,கௌரவ விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்களினால் சுமார் 13 மில்லியன் ரூபாய் நிதி ஒதூக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஆரம்ப பிரிவு வகுப்பறைக்கட்டடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுமார் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதூக்கீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய ஒன்று கூடல் மண்டபத்திற்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அஸ்ஹர் தேசிய பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மாகாண ரீதியில்,தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு,தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை, கா.பொ.த.சாதராண தரம், உயர் தர பிரிவகளில் சாதனை படைத்த மாணவர்களும் விருந்தினர்களினால் கௌரவிக்கப்பட்டதோடு, ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகீர்,முன்னால் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் நகர சபை உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE