தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து  ஈபி ஆர் எல் எப் வெளியேறியமை பாராட்டத்தக்கது ஏனைய இரு கட்சிகளும் வெளியேறுவதாகக் கூறி ஈபி ஆர் எல் எப் பைதனியே விட்டுவிட்டு தமது அரசியலை நடத்துகிறார்கள் இதுவும் ஒரு வகை துரோகமே

41

தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போர் முடிவடைந்து பத்து ஆண்டுகளை கடக்கவுள்ள நிலையில்  இதுவரையிலும் இக் கட்சிகள் தனிப் பெரும் பலத்தை மக்கள் மத்தியில் காண்பிக்கவில்லை. தேர்தல் காலங்கள் வருகின்றபொழுது கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சீர்குழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகின்றது என்று சம்பந்தன் தலைமை கூறுகின்றபொழுது அதனை ஏற்றுக்கொள்ளும் இவ் ஆயுதக் கட்சிகள் அக்கட்சியின் தலைவர்கள் ஆமோதித்து நிபந்தனைகள் சிலவற்றை முன்வைத்து மீண்டும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

tna_3 tna-party-leaders1-300x295

இத்தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது இவ் ஆயுதக்கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து இவ்தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சுரேஸ் பிரமேச்சந்திரன் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

இதற்குக் காரணம் ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் ஆதரவினை வழங்காமையே. செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் என்போரின் அசமந்தப்போக்கே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப் படாமைக்கான காரணமாகும்.

அதுமட்டுமன்றி தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய உயர்மட்டக் குழுக்களின் நிலைப்பாடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் அதில் சாதக பாதக விளைவுகள் இருக்கின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையுடன் தமிழரசுக்கட்சியின் ஆதரவின்றி தேர்தல் களத்தில் ஆயுதக் கட்சிகள் இறங்குமாக இருந்தால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவு அற்றுப்போகும் என்ற பயம் இருக்கின்றது. அதேநேரம் தமிழரசுக்கட்சி ஆயுதக்கட்சிகளை ஓரங்கட்டி தாம் தனித்து போராடுவார்களாக இருந்தால் தாமும் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்ற காரணத்தினாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஒருவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டாலும் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு ஒத்துவரமாட்டார். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் இக்கட்சிகளை தனியே போட்டியிடவைத்து அதில் வெற்றி பெறுபவர்களை தம்மோடு இணைத்துச் செயற்படுவதே அவர்களின் திட்டமாகும். தமிழரசுக் கட்சியின் பிடியிருந்து இக்கட்சிகள் தாமாகவே வெளியேறி ஒரு தேர்தலைச் சந்திப்பார்களா? என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் ஆயுதக் கட்சிகளைத் தவிர்த்து போட்டியிடுமாக இருந்தால் 17 ஆசனங்களைக் கைப்பற்ற முடியாது. தனித்துப் போட்டியிட்டு இவ்ஆயுதக் கட்சிகள் வெற்றிபெறுவார்களாக இருந்தால் பாராளுமன்றத்தில் இவர்களுடைய பலம் மேலோங்கி நிற்கும்.

141230100815_r_sampanthan_tna_leader_512x288_bbc_nocredittna-press-meet

இதன் அடுத்த கட்டமாக அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதிவுகளை பெற்றுக்கொண்டு மக்களுக்குச் சேவையாற்றும் வாய்ப்பைப் பெறுவர். மூன்று தசாப்த காலங்களாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதனைத் தக்கவைத்துக்கொண்டு வருகின்றார். கொலைகார ஈ.பி.டி.பிக் கும்பல்களினால் தேர்தல்களில் வெற்றிபெறமுடியுமாக இருந்தால்,

விடுதலைப்புலிகள் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளுக்கு ஏன் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. கட்சிப் பதிவு விடயத்தில் தமிழரசுக் கட்சி இரட்டை வேடம் போடுகின்றது. ஆயுதக் கட்சிகள் எம்மோடு இணைந்து போட்டியிட்டால் என்ன? போட்டியிடாமல் விட்டால் என்ன? என்பது இவர்களின் நிலைப்பாடு.

தமிழரசுக் கட்சியினை விட இவ் ஆயுதக்கட்சிகளுக்கே இந்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்கத் தகுதி இருக்கின்றது.

இத் தகுதியை உரியமுறையில் பயன்படுத்த முடியாததற்கு காரணம் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக்கொண்டு இவ் ஆயுதக்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியின் பிரச்சாரம், தமிழினத்தின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் இவர்கள் என்று மேடை மேடையாக முழங்குவார்கள்.

இதனால் இவ் ஆயுதக் கட்சிகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. பொதுவாக தமிழரசுக் கட்சி இவ் அயுதக் கட்சிகளைத் தனித்துப் போட்டியிடுங்கள் என்று கூறினாலும், அவர்கள் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று போட்டியிட முன்வரமாட்டார்கள். அவ்வாறு நடக்குமாக இருந்தால் உண்மையில் இவ் விடயம் வரவேற்கத்தக்கது. தமிழரசுக் கட்சியை இவ் ஆயுதக் கட்சிகள் கைக்கூலிகளாக வைத்திருக்கவேண்டும். தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் பங்களிக்காத இவர்களை மக்கள் பிரதிநிதிகள் என்று மகுடம் சூட்டி இன்று ஆசனத்தில் அமரவைத்திருப்பதற்கு இவ் ஆயுதக்கட்சிகளும் காரணமே.

தமிழரசுக் கட்சியினுடைய செயற்பாடுகள் அண்மைக்காலமாக தமது தனித்துவம் கருதியதாகவே அமையப்பெற்றுள்ளது. 2018 க்குப் பின்னர் நடைபெறவிருக்கின்ற மாகாணசபைத் தேர்தலிலாவது இவ் ஆயுதக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவார்களா? அல்லது தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போராடுவார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இன்னமும் இருக்கின்றது. பதவி மோகங்களைக்கொண்டு இவ் ஆயுதக்கட்சிகளை விலைக்கு வாங்கலாம் என்று தமிழரசுக் கட்சி தப்பான அபிப்பிராயம் கொண்டு இருக்கின்றது.

 

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், விடுதலைப்புலிகள் ஒரே கொள்கையோடு இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். இவர்களின் பிளவுக்கு இந்தியாவே காரணம், இதனாலேயே சகோதரப் படுகொலைகள் தாறுமாறாக இடம்பெற்றது.

தமிழனை சிங்களவர்கள் வென்ற வரலாறு இல்லை. உலக நாடுகளின் உதவிகளுடனேயே தமிழர் போராட்டம் மௌனிக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியானது தனது சர்வாதிகாரத்தை சம்பந்தன் தலைமையில் நெறிப்படுத்தி வருகின்றது. இதற்கு இவ் ஆயுதக்கட்சிகள் முற்றுப்புள்ளியை வைக்காவிட்டால் தமிழரசுக் கட்சியிடம் கையேந்தி வாழ்வதைவிட வேறு வழியில்லை. முன்னால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் கட்சியின் ஒற்றுமைக்காகவும், கட்சியைப் பதிவுசெய்யவேண்டும் என்பதிலும் முழுமூச்சாகச் செயற்பட்டார். அதன் விளைவு கடந்த வருட பாராளுமன்றத் தேர்தலில் திட்டமிட்டு தமிழரசுக் கட்சியினால் ஓரங்கட்டப்பட்டார். இவ்விடயம் யாவரும் அறிந்ததே.

தேசியப் பட்டியலில் வந்த சுமந்திரன் அவர்கள் தேர்தலில் களமிறக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக சுரேஸ் பிரேமச்சந்திரன் கடமையாற்றிய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றி தவறாகக் கூறவில்லை. அதன் ஊடகப் பேச்சாளராக தனது கடமையை திறன்படச் செயற்படுத்தி வந்தார். எனினும் அவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டுவதற்கு அக்காலகட்டத்தில் ஐ.தே.கவுடன் இணைந்து சுமந்திரன் செயற்பாட்டார் என்பது தகவல். தமிழினத்தின் தேசியம், சுயநிர்ணயம் என்று போராட ஆரம்பித்த இந்த ஆயுதக் கட்சிகள் இன்று தமிழரசுக் கட்சியிடம் கையேந்தி நிற்பது உகந்ததல்ல. தமிழரசுக் கட்சியுடன் இவ் ஆயுதக் கட்சிகள் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி தன்னைப் பலப்படுத்திக் கொண்டே செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்வரும் தேர்தல்களிலாவது இவ் ஆயுதக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழரசுக் கட்சியைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்ய வாருங்கள் என்று அழைக்கவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் எம்மை விட்டால் இவ் ஆயுதக்கட்சிக்கு வழியில்லை என்று சொன்ன தமிழரசுக் கட்சியின் வாய்க்குப் பூட்டுப் போடமுடியும், இந்த நிலைமை மாற்றம் பெறும்வரை அரசாங்கமும் எம் தமிழ் அரசியல்வாதிகளை கைப்பொம்மைகளாகவே பயன்படுத்தி வருவார்கள்.

74

விடுதலைப்புலிகளுடைய செயற்பாடுகள் தற்பொழுது ஆயுத ரீதியாக எமது நாட்டில் இல்லை. மூன்று கட்சிகளும் இணைந்து ஏன் தமிழ்தேசியக் கூட்டமைப்பாகப் பதிவு செய்யத் தயங்கவேண்டும். இந்த மாயத் தோற்றத்திலிருந்து முதலில் வெளியில் வாருங்கள். அப்பொழுது உங்களுடைய அரசியல் ஒளிமயமாக அமையும் என்பதே இன்றைய அரசியலின் நிலைப்பாடும் கூட. இல்லையேல் தமிழரசுக் கட்சி இவ் ஆயுதக் கட்சிகளை மேலோங்கவிடாது, தமது கட்சியின் கீழ் வாழையடி வாழையாக வைத்துக்கொள்ளும். தமிழரசுக் கட்சிக்கு பாடம் புகட்டும் செயற்பாடுகளை எதிர்வரும் காலங்களிலாவது இவ் ஆயுதக் கட்சிகள் செயற்படுத்துவார்களாக இருந்தால் மகத்தான வெற்றிபெற்று தமிழ் மக்களுக்கான சேவையினை இவ் ஆயுதக் கட்சிகள் செய்யமுடியும். இல்லையேல் காலப்போக்கில் இவ் அரசியல் கட்சிகள் அரசியலில் கூட இருந்து ஓரங்கட்டப்பட்டு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இவ் நாட்டில் இருக்கும் சூழ்நிலை உருவாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பல ஆண்டுகளுக்குப் பின்பு எதிர்க்கட்சியாக வருமென்று யார் எதிர்பார்த்தார். ஆகவே இனி இந்த நாட்டில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியுமே இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். முஸ்லிம்கள் காலத்துக்கு காலம் பச்சோந்திகளாக மாறிக்கொள்வார்கள்.

தன்மானத்தோடு தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப்புறப்பட்ட இவ் ஆயுதக் கட்சிகளுக்கே தமிழ் மக்களுடைய வேதனை புரியும்.

கடந்தகால கசப்பான உணர்வுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, தமிழ்தேசியக் கூட்டமைப்பாகப் பதிவுசெய்து, தமிழ் மக்களுக்கான சேவைகளைச் செய்ய முன்வாருங்கள். இல்லையேல் தமிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பொம்மைகளாகவும், அவர்களின் அடிவருடிகளாகவும் தொடர்ந்து செயற்பட நேரிடும். இதனைத் தவிர்த்துக் கொள்வதே ஆயுதக் கட்சியினருக்குச் சிறந்தது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து  ஈபி ஆர் எல் எப் வெளியேறியமை பாராட்டத்தக்கது ஏனைய இரு கட்சிகளும் வெளியேறுவதாகக் கூறி ஈபி ஆர் எல் எப் பைதனியே விட்டுவிட்டு தமது அரசியலை நடத்துகிறார்கள் இதுவும் ஒரு வகை துரோகமே தமிழரசுக்கட்சியின் பலத்தையும் பலவீனத்தையும் தீர்மானிப்பவர்களாக அவர்களுக்கு முன்டு கொடுத்துக்கொண்டிருக்கிற இரண்டு ஆயுத்கட்சியும் வெளியேறி போராளிகளின் பலத்தை காட்டவேண்டும் இல்லையேல் மக்களை ஏமாற்றாது இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏற்திப் போராட ழூண்று ஆயுதக்கட்சிகளும் முன்வரவேண்டும் இல்லாவிட்டால் உசுப்போத்தாது வாழப்பழகிக்கொள்ளவேண்டும்

சுழியோடி

SHARE