மின்சாரசபைக்கு எதிராக மன்னாரில் கவனவீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு

21
-மன்னார் நகர் நிருபர்-
 
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் துண்டிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னாரில் எதிர்வரும்  வெள்ளிக்கிழமை (3)  மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை மேற்கொள்ள   மன்னார் பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தொடர்ச்சியாக சீரான மின்சாரம் மக்களுக்குக் கிடைத்ததில்லை, தினமும் ஒன்றிரண்டு மணித்தியாலங்கள் அல்லது நாள் முழுவதும் என்று மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமையாகிவிட்டது.
இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றார்கள்.
 குறிப்பாக மாணவர்களுக்குப் பரீட்சைகள் நெருங்கும் காலத்தில் இவ்வாறான மின்துண்டிப்பினால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ன.
எனவே பல்வேறு காரணங்களை முன் வைத்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு  மன்னார் மின்சார சபையில் ஆரம்பித்து மன்னார் மாவட்டச் செயலகம் வரை பேரணி நடைபெறவுள்ளது.
குறித்த பேரணியில் மன்னார் மக்களை கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு  ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE