கிராம சேவையாளர் ஆசிரியர் மோதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டு தீர்வு

24

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் ஆசிரியை ஒருவர் தனது காணியைச் சுத்தப்படுத்துவதற்குச் சென்றபோது அப்பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள கிராம சேவையாளரினால் தாக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் ஆசிரியரினால் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டு நீதியான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியிலுள்ள காணியினைத் துப்பரவு செய்துகொள்வதற்கு நீண்ட நாட்களின் பின்னர் ஆசிரியை ஒருவர் சென்றுள்ளார்.

குறித்த காணியை  பக்கத்து காணி உரிமையாளர் அது தனது காணி என்று ஆசிரியையிடம் தெரிவித்துள்ளதுடன் அப்பகுதி கிராம அலுவலகரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். கிராம சேவையாளரும் சென்று ஆசிரியையுடன் கலந்துரையாடியதுடன் அது அரசகாணி என்று கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியைக்கும் கிராம அலுவலருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது கிராம அலுவலகர் தன் மீது தாக்கியதாக குறித்த ஆசிரியை மனித உரிமைக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் கிராம அலுவலகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு ஒன்றை கிராம அலுவலகர் மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாக குறித்த ஆசிரியர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது பொலிஸாரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி வினவியபோது இரு பகுதியையும் விசாரணைக்குட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸார் ஆசிரியருடன் உதவிக்குச் சென்ற நபர் ஒருவரை அழைத்துவருமாறு அவர் கிராம அலுவலகரைத் தாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வந்தால் ஆசிரியரை விடுவிப்பதாக ஆசிரியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து மனித உரிமைக்குழுவினர் பொலிஸாரிடம் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இரு தரப்பினரையும் பக்கச்சார்பின்றி விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தபோது பொலிஸார் இரவு 10மணிவரையும் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை ஆசிரியரை தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் பக்கசார்பாக நடந்துகொள்வதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பதில் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு மறுநாள்  அலுவலகரையும், ஆசிரியரையும் அழைத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

SHARE