வடமாகாணத்தில் சித்த மருத்துவத்திற்கு ஏற்பட போகும் பேராபத்து

39

வடமாகாணத்தில் சித்த மருத்துவத்திற்கு ஏற்பட போகும் பேராபத்து


வடமாகாணத்தில் சித்த ஆயுள்வேதம் என்பது பரம்பரை பரம்பரையாகவும் அதற்காக விசேட கற்கை நெறிகளையும்
கற்று தமது தொழில் செயற்பாடுகளை செயற்ப்படுத்தி வருகின்ற இந்த காலக்கட்டத்தில். சித்த ஆயுள் வேத வைத்தியர்களுக்கு
சேரு பூசும் வகையில் ஒரு சில போலி சித்த ஆயுள் வேத மருத்துவர்களால் வன்னியில் இருக்க கூடிய ஏனைய ஆயுள் வேத
வைத்தியர்களையும்ரூபவ் அவர்களது சொந்த தொழில் நிறுவனங்களையும் இழுத்து மூடும் ஒரு செயற்பாடாக அண்மைக்காலமாக ஒரு
சில முகப்புத்தகங்களிலும்  இணைய ஊடகங்களிலும்  அச்சு ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. வன்னி மாவட்டத்தை பொறுத்த
வரையில் போலியாக செயற்படுகின்ற 25மருத்துவ இடங்களை தினப்புயல் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இவர்கள்
தாமாகவே தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவது சிறந்தது. இல்லையேல் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
என்பதை தங்களுக்கு அறிய தருகிற அதே நேரம் பேர் பட்டியலை வெளியிடுவதற்கும் நாம் தாயாராக உள்ளளோம்.
முறைப்படி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத சித்த வைத்தியர்கள் அணைவரும் அதைப் பெற்றுக்கொள்ளும் கால
அவகாசமாகவே நாம் 02மாத கால அவகாசத்தை தங்களுக்கு கொடுத்துள்ளோம். சித்த ஆயுள் வேத துறையில் சத்திர சிகிச்சை
செய்வதற்கோரூபவ் குளுக்கோசு ஏற்றுவதற்கோரூபவ் ஊசி போடுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அத்தோடு
ஆங்கில மருந்துகளும் கொடுக்க முடியாது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. அதனை விடுத்து இதனுடைய செயற்பாடுகள்
செயற்ப்பட்டு வந்தது என்பதையும். இதனைக் கடந்தக்கால அமைச்சுகள் கண்சாடையாக விட்டு வந்தது. ஒரு சிலரை பிடித்து வழக்கு
போடுவதும் பின் விடுதலை செய்வதும் இவ்வாறே நடைமுறைகள் நடந்து வந்ததே தவிர முற்று முழுதாக போலி சித்த மருத்துவர்களை
இனங்கண்டு அவர்களை வைத்திய துறையில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எவரும் எடுக்கவில்லை இது மிகவும் கவலைக்குரிய விடயம்
தான். அவ்வாறு ஏன் நிலைமை உருவாக்கப்பட்டது என்பதை பார்க்கின்ற பொழுது இதில் பல இலஞ்ச ஊழல்கள் சம்மந்தமாகவும்
எம்மிடம் தரவுகள் கிடைக்கப்பெற்றன. இதில் சட்டவிரோதமாக இயக்கப்படும் பாமசிகளும் உள்ளடக்கப்படுகின்றன. இவர்களையும்
நாம் இணங்கண்டுள்ளோம்.
குறிப்பாக தழிழ் ரூடவ்ழ விடுதலைப்புலிகள் காலப்பகுதயில் அப்பிரதேசத்தில் மருத்துவ துறையில் பணியாற்றிய
வைத்தியர்கள் இங்கு இருப்பவர்களை விட திறமையானவர்கள். அவ்வாறு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து
வெளியேறிய வைத்தியர்கள் அவர்களின் தொழிலை சட்ட ரீதியாக செய்ய முடியாத நிலை தோன்றியது. ஆகவே இவர்கள்
ஆயுள் வேதம் என்ற போர்வையில் ஏனைய மருத்துவங்களையும் செய்து வருகின்றனர். இவர்களின் செயற்பாடுகளை முடக்கும்
வகையில் திட்டமிடப்பட்ட சதியாக கூட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருந்தும் இலங்கை அரசாங்கத்தின் சட்ட
திட்டங்களுக்கு அமைய ஒரு மருத்துவர் செயற்ப்படவில்லை என்றால் அவர் சட்ட ரீதியாக குற்றவாளிதான். மகிந்த ராஜபக்ஷ
அரசாங்க காலப்பகுதியில் கோத்தபாயராஜபக்ஷயினால் விடுதலைப்புலிகள் மருத்துவ துறையில் இருந்த பலருக்கு விசேட
அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதனை வைத்தே பலர் வைத்திய தொழிலை நடத்தி வந்தனர்.
நிலைமை இவ்வாறு இருக்க தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்ட பிரச்சனைகளினால் குறித்த ஆயுள் வேத மருத்துவர்
ஒருவருக்கும் குறித்த ஊடகவியளாளர் ஒருவருக்கும் இடையில் ஏற்ப்பட்ட பிரச்சனைகளின் காரணங்களினாலே நெளுக்குளத்தில்
சித்த ஆயுள் வேத மருத்துவம் புரிந்து வருகிற நிரோசன் அவர்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து ஏனைய சித்த மருத்துவர்களும்
பிழையானவர்கள் என நாம் சித்தரித்து விட முடியாது. இச் செய்தியை பரப்பும் ஊடகவியளாளர் ஒருவர் தன்னிடம் பணம்
கேட்பதாக ஆயுள் வேத வைத்தியர் நிரோசன் தினப்புயல் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதில் பல முன்னணி
அரச உத்தியோகத்தவர்கள் சம்மந்தப்பட்டு இருப்பதால். இதனை நன்கு விசாரித்து பின்னர் இதனை நாம் ஆதார பூர்வமான
செய்தியாக வெளியிடுவோம் என்பதையும் இதில் தெரிவித்துள்ளோம். நிரோசன் மருத்துவரினால் பாதிக்கப்பட்ட குறித்த
பெண் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு தற்போது இப் பிரச்சனையானது நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவர் குறித்த பெண்ணுடன் தாகாத முறையாக நடந்துக் கொண்டதாக நிரூயஅp;பிக்கப்பட்டால் நீதி மன்றத்தினால்
அதற்கான தண்டனை வழங்கப்படும.; குறித்த ஆயுள் வேத மருத்துவரின் செயற்ப்பாட்டால் ஏனைய ஆயுள் வேத மருத்துவர்களின்
முகத்தில் கரி பூசிவிட முடியாது.
ஆங்கில மருத்துவ துறையை வளம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு சில வைத்திய கலாநிதிகளின் செயற்பாடுகள் கூட இதன்
பின்னணியில் தங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தங்களுடைய தொழில் நிறுவனத்தில் வருமானம் இல்லாத காரணத்தால்

இவ்வாறான ஆயுள் வேத மருத்துமனையை முடக்கி விட வேண்டும் என்ற காரணத்தினால் ஏனைய சித்த வைத்தியர்களின் முகத்தில் கரி
பூசும் நடவடிக்கை இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.
குற்றவாளிகள் எவராக இருப்பினும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இதில் மாற்றுக்கருத்து இல்லை. எவர் எவருடைய
பின்னனியில் ஆயுள்வேத மருத்துவத்தை முடக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றது. யார் யார் எந்த சித்த வைத்தியர்களிடம்
முறைகேடாக நடந்துக் கொண்டார்கள். அனுமதிப்பத்திரம் இல்லாத சித்த மருத்துவர்கள் அவர்கள் எப்படி தங்களை இயக்கி
வருகிறார்கள்.
தொடரும்……

SHARE