சர்வதேச விபச்சார கும்பலிடமிருந்து அப்பாவி பெண்கள் மீட்பு!!!

10

வளைகுடா நாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட நேபாளத்தை சேர்ந்த 16 பெண்களை சர்வதேச விபச்சார கும்பலிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அழைத்து வரப்பட்ட நேபாள நாட்டை சேர்ந்த பெண்களை சர்வதேச விபச்சார கும்பல் ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது.

விபச்சார கும்பலிடம் இருந்து தப்பித்த நேபாளத்தை சேர்ந்த பெண்கள் இருவர் கடந்த மாதம் தாயகம் திரும்பியுள்ளனர்.

அங்கு தங்களுக்கு ஏற்பட்ட கதியை நேபாள பொலிஸாரிடம் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய நேபாள பொலிஸார்  இந்தியாவில் உள்ள நேபாள நாட்டு தூதரகத்துக்கு தகவல் அளித்தனர்.

இது தொடர்பாக வாரணாசியில் ஜெய் சிங் என்பவரை வாரணாசி குற்றப்பிரிவு பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

பொலிஸ் விசாரணையின் போது வேலை வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் சர்வதேச விபச்சார கும்பலை பற்றி ஜெய் சிங் அளித்த தகவல்களின் அடிப்படையில், வாரணாசி குற்றப்பிரிவு பொலிஸார் மற்றும் டெல்லி மாநில பொலிஸார் இணைந்து டெல்லியில் தேடதல் வேட்டைகளை நடாத்தினர்.

தேடுதல் வேட்டையில் டெல்லி வசந்த விகார் பகுதியில் இயங்கி வந்த சர்வதேச விபச்சார கும்பலை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் சிக்கியிருந்த நேபாளத்தை சேர்ந்த 18 பெண்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட பெண்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ள பொலிஸார்  கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE