60 சொகுசு வாகனங்களை நசுக்கி அழித்த பிலிப்பைன்ஸ் அரசு (காணொளி இணைப்பு)

17

40 கோடி ரூபாய் மதிப்புடைய 60 சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி, ஜே.சி.பி இயந்திரம் மூலம் பிலிப்பைன்ஸ் அரசு அவற்றை நொறுக்கும் பணிகளை மேற்கொண்டது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக உள்ள ரோட்ரிகோ டுடெர்டே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட, ஐநா சபை கண்டனம் தெரிவித்தற்கு. ஐ.நா சபை தலைவரின் மண்டையை உடைக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.


இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கேகேயான் மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன.

லம்போர்கினி, போர்ஸ்ச், மெர்ர்சீடெஸ் பென்ஸ், ஹார்லே டேவிட்சன் ஆகிய பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் வாகனங்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

இந்த காட்சியை ஜனாதிபதி டுடெர்டே ஹாயாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துள்ளார். குறித்த காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

SHARE