தினமும் 200 கோடி நிமிடங்களுக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் கால்

134
தினமும் 200 கோடி நிமிடங்களுக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் கால்

வாட்ஸ்அப் செயலியை தினமும் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், தினசரி 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் பயனர்கள் தினமும் 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால்களை மேற்கொள்கின்றனர் என வாட்ஸ்அப் வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறது.
வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தில் ஒரே சமயம் அதிகபட்சம் நான்கு பேருடன் உரையாட முடியும். வாட்ஸ்அப் மெசேஜ்களை போன்றே க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சமும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.
உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE