பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.

124

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் காங்கிரஸின் சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஹிஸ்புல்லாஹ் எச்சரித்துள்ளார்.

 

SHARE