ஈரானுடனான உறவை வளர்க்க எவ்வித சிக்கலும் இல்லை – மைத்திரி

25

இலங்கை மற்றும் ஈரானுக்கிடையில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்திக் கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜாவட் ஸரிவ் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையேயான பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவினை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடந்த மே மாதம் அவர் ஈரானுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பிலும் உரையாடினார். அத்தோடு சர்வதேச அமைப்புக்களில் இருதரப்பு நல்லுறவினை உறுதிசெய்து கொள்வதற்கு ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததுடன் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்திக் கொள்வதில் எவ்வித தடைகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

SHARE