தொடரும் புதைகுழி அகழ்வுப்பணி

29
மன்னார் நகர் நிருபர்
மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தோகத்தை அடுத்து மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் தற்போதும் மேலும் சந்தோகத்தை ஏற்படுத்தும் விதமாக அனோக மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி அகழ்வு செய்யும் பணிகளும் இடம் பெற்று வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இப் பகுதியில் அகழ்வுப் பணி இடம்பெற்று வருகின்றது.
இவ் அகழ்வுப் பணியானது இன்று (01.08.2018) 45 வதுதடவையாக இடம்பெற்றுவருகின்றது.இன்று இவ் பணியானது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் நோக்குடன் துப்பரவு செய்யும் பணியும்
அத்துடன் இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள நடைபாதையில் ஐந்து அடி ஆலத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலேயும் அகழ்வு இடம்பெற்றது. குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மேற்படி வளாகத்தின் மையப்பகுதியில் எந்த வித குழப்பமும் இன்றி ஒழுங்கான நிலையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் சிலவும் அதே நேரத்தில் வளாகத்தின் நுழைவு பகுதியில் ஓன்றுடன் ஒன்று செருகிய விதமாகவும் அவசர அவசரமாக புதைக்கபட்ட விதத்திலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன தற்போது மையப்பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக அதிக கவணம் செலுத்தப்படவில்லை எனவும் வளாகத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள மனித எச்சங்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரைக்கும் 62 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 54 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
SHARE