பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள்

23

நாடாளாவிய ரீதியில் இரண்டாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் தவணை தரம் 4 சுற்றாடல் பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகளைக் காணக்கூடியதாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

வினாத்தாள்கள் அச்சிடுவதற்கு முன்னர் பரிசீலனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவற்றை திருத்தி மாணவர்களுக்கு சரியான சொற்களை வழங்கவேண்டிய பொறுப்பு தமிழர்கள் அதிகமுள்ள கல்வி வலயங்களையே சாரும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைகள் வெளிவந்துள்ளபோதிலும் இவற்றைத்திருத்தி மாணவர்களுக்கு சரியான கல்வி நடவடிக்கை எவையும் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE