கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது – தலைவர் ஸ்டாலின்

29

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது. தி.மு.க. தொண்டர்கள் யாரும் தங்களது உயிரை மாய்த்துக கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

‘தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது.

காவேரி வைத்தியசாலையில் கருணாநிதிக்கு வைத்தியர்கள் குழு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்ற அதிர்ச்சியால் 21 தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். தி.மு.க. தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரை மாய்த்துக கொள்ளும் முயற்சியில் யாரும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தலைவா வா என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண் போகவில்லை.’ என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

SHARE