கருணா, பிள்ளையான் குழுவினரை வைத்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கெரில்லாத் தாக்குதல்களை ஆரம்பிக்க அரசு திட்டம்.

321

 

தற்போதைய அரசாங்கம் அற்றுப்போகும் நிலையில் இராணுவ ஆட்சியினைக் கொண்டுவருவதற்கான முனைப்புகளில் கோத்தபாய அவர்கள் இறங்கினாலும் அதனை இலங்கையில் செயற்படுத்துவது கடினமானதொரு விடயம். ஆகவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்று தற்போது அரசின் ஒட்டுக்குழுக்களாக செயற்படும் கருணா, பிள்ளையான் போன்றோரை தேசத்துரோகச்செயல்களில் ஈடுபடுத்தவிருப்பதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கெரில்லாப் போர்முறையை உண்மையில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்ற ரீதியில் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் பிள்ளையானும், பிரதி அமைச்சரான கருணா அம்மானும் பயன்படுத்தப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

thumbnail

download Gota-Karuna  on_20090519 pillaiyaan

முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடந்த காலங்களில் கருணா அம்மான் தீவிரமாக இறங்கியிருந்தார். இத்தேர்தல் காலகட்டங்களில் கருணா, பிள்ளையான் போன்றோர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு முழுஅளவிலான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுதுதே தேர்தல் வன்முறைகள் கிழக்குமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தோல்வியடையப்போகும் இறுதி தறுவாயில் விடுதலைப்புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டார்கள் என்பதனைக் காட்டுவதற்காக இவ்வரசு மேற்கண்டவாறான விடயங்களை கட்டவீழ்த்துவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கருணா அம்மானுக்கு விடுதலைப்புலிகளுடன் இருந்த உத்வேகம் தற்போது குறைந்துகாணப்படுவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. எது எவ்வாறாக இருப்பினும் மஹிந்த குடும்பத்திற்கு இத்தேர்தல் இறுதிச் சந்தர்ப்பமாகும். எனவே முழுஅளவிலான சக்தியையும் இம்முறை பயன்படுத்திக்கொள்வார்கள். இதனால் இந்நாடு மீண்டும் ஒரு போர்ச்சூழலுக்கும் தள்ளப்படும் நிலை தோன்றும் எனவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

SHARE