தேசியம் சுய நிர்ணய உரிமையை வேசிகளுக்குக் காட்டிக் கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

28

தேசியம் சுய நிர்ணய உரிமையை வேசிகளுக்குக் காட்டிக் கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.


கட்டுரையின் தலையங்கத்தினைப் பார்த்தவுடனேயே கட்டுரை எழுத்தாளர் மீது கூட்டமைப்பின் கோமாளிகள் ஆத்திரப்படக் கூடும். சொல்ல வேண்டிய விடயங்களை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்வதால் அது அரசியலில் ஓர் மாற்றத்தை நிகழ்த்தும்.
ஆயுதப் போராட்டம் ஏன்? எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? என்கின்ற விடயங்கள் தமிழ் அரசியல் வாதிகளைப் பொறுத்த வரையில் அதனை அவர்கள் பட்டும் படாமலும் அறிந்திருக்கிறார்கள்.
‘கோவணம் கட்டினாலும் கொள்கை மாறக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்த தமிழ் ஆயுதக்கட்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமே.
தேசியத்தை வேசிகளுக்கு விற்கிறார்கள் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வேசிகள் யார்? எதற்காக நாம் இவர்களை வேசிகள் என்கின்றோம்?
வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை இரு கூறுகளாகப்பிரித்து அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் முதலாவது வேசிகள.;
முப்பது வருட கால போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அதில் குளிர் காய்ந்தவர்கள் இரண்டாவது வேசிகள்
போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் அரச நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப செயற்றிட்டங்களை முன்னெடுத்து தமிழர் தாயகத்தில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைத்தவர்கள் மூன்றாவது வேசிகள்
குறிப்பாக எவ்விடயமாக இருந்தாலும் தன்மானத்தை விற்று அரசியலில் பிழைப்பு நடத்துகிறவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே இருக்கின்றார்கள். இவர்கள் யார்யார் என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டினால் அவர்களைத் துரோகி என்று முத்திரை குத்துவது வழமையாகிவிட்டது.
எந்தவொரு அரசியல் யாப்பும் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தருவதாக அமையவில்லை. இலங்கையில் தற்போது அமுலிலுள்ள சட்டத்தை நீக்கி புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பொது மக்களிடமிருந்து எழுத்து மூலமும் , வாய்மூலமும் பிரேரணைகளைப் பெறுவதற்கு அதற்கென்று நியமிக்கப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழு அவர்களது பணியை 18.01.2016. அன்று கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பித்தனர். இக்குழு ஏனைய மாவட்டங்களுக்குச் செல்லும் திகதிகளும் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டது.
உத்தேச அரசியல் யாப்பு மூன்று முக்கியமான நோக்கங்களைக் கொண்டு வரும் என்றும் பேசப்பட்டது.

1.ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல்.
2.தற்போதுள்ள பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருதல்.
3.இனப்பிரச்சினைக்குரிய நிரந்தரத் தீர்வுக்கான அதிகாரபகிர்வு.

இவற்றுள் இலங்கையில் வடகிழக்குத் தமிழர்களுக்குக் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் ஒரு செயற்பாடு வடக்குக் கிழக்கில் தமிழர் தாயகப் பகுதியில் கடந்த அறுபது வருடமாக உரிமைப் போராட்ட அரசியல் பகிர்வாகவே அது இருந்து வந்தது. இதுவரையிலான இலங்கையினது அரசியலமைப்புக்கள் எதுவும் தமிழர்கள் எதிர்பார்த்த அதிகாரப் பகிர்வை வழங்கியிருக்கவில்லை. இறுதியாக 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சியும், 1987 இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்காகக் கொண்டு வரப்பட்ட 13ஆம் அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாணசபைக்கான அதிகாரப் பகிர்விலும் குறைபாடுகளே காணப்பட்டன……………………………………………………
இது தான் இன்றைய அரசியலினுடைய நிலைப்பாடு. இதி;ல் மாற்றம் எதுவும் நிகழுமாக இருந்தால் வடகிழக்கு இணைப்பு இ தமிழர்தாயக பிரதேசங்கள் விடுவிப்பு , தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவையும் மிக முக்கியமாக இலங்கையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமலாக்குதல். என்பவற்றுக்காக தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற வேசிக்கட்சிகள் போராட்டங்களை நடத்துகின்றார்களா, இல்லை.
தற்பொழுது அரசியலை ஒரு தொழிலாக இவர்கள் செய்வதன் காரணமாகவே இவர்களை நாம் வேசிகள் என்று சொல்கின்றோம். குறித்த தொழிலில் தான் கூடுதலான ஆதாயம் கிடைக்கப்பெறும். அதனால் கூடுதலான ஆதாயங்களிலே கவனம் செலுத்துகின்றார்களே தவிர தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்;டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது தொடர்ந்தும் தமிழினத்தைத் தமிழர்களே காட்டிக் கொடுக்கும் துர்பாக்கிய நிலையே தொடர்கிறது.திரைமறைவிலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்ற ஆயுதக் கட்சிகள் ஆயுத அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.
தேசியம், சுயநிர்ணய உரிமைக்காக கடைசிவரைப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை சீர்குலைத்து, அவர்களை அரசியலில் ஓரங்கட்டும் செயற்பாடுகளையே அரசாங்கம் விரும்பியது. அதற்காகவே டெலோ, புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், கருணாகுழு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்றவர்களை அரசாங்கம் தம்பக்கம் வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முற்றுகைக்குக் கொண்டு வந்தது. தமிழ் மக்களது போராட்டம் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு செல்லப்படும் வரையிலும், ஓர் இனச்சுத்திகரிப்பு இடம் பெற்ற வரையிலும் இவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து உல்லாச வாழ்க்கை நடாத்தினார்களே தவிர தமிழ் மக்களுடன் இணைந்து போரை நிறுத்தி முள்ளிவாய்க்கால் அழிவைத் தடுத்து தமிழ் மக்களைக் காப்பாற்றவென இவ்கட்சிகளில், ஆயுதக்குழுக்களில் யாராவது முன்வந்தார்களா, அல்லது டெலோ, புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், கருணாகுழு, என்பவர்கள் இக் காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயதமேந்தி ஏன் போராடவில்லை? கனிசமான இழப்புக்களை அரசாங்கத்திற்கு அரச கட்டுப்பாட்டிலிருந்து கொடுத்திருந்தால் இலங்கை அரசு தடுமாறியிருக்கும்.
ஆனால் போராடினோம் , போராட்டத்திற்காக உரிமைக் குரல் கொடுக்கின்றோம் என்று தற்பொழுது பேசிக் கொள்கின்ற இவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அரசாங்கத்திற்கு இழப்பு விளைவித்திருக்கலாம், ஆங்காங்கே குண்டுத் தாக்குதல்களை நடாத்தியிருக்கலாம். இதனை ஏன் இவர்கள் செய்யவில்லை?
தற்பொழுது என்னவெனில் பூச்சாண்டி அரசியல் நடத்துகின்றார்கள். தியாகிகளின் நினைவு தினங்களை கொண்டாடுகின்றார்கள். தமது கட்சிகளைப் பலப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட பிரதேசங்களில் தையல் இயந்திரம், ஆடு, மாடு, கோழி என்பவற்றை வழங்குகிறார்கள்.
இதனைப் படம் பிடித்துப் பத்திரிகைகளில் போடவென இவர்களின் பின்னொரு கூட்டம்.
சமாதானப்பேச்சுக்கள் இதற்குரிய தீர்வு இல்லை என்றால் மேலே குறிப்பிடப்பட்ட ஆயுதக் கட்சிகள்; ஏன் ஒன்றினைந்து மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்க முடியாது?
அன்றும் ஓர் சுகபோக வாழ்க்கையினை நடாத்த வேண்டுமாக இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா கேட்டுக் கொண்டதற்கு அமைய முதலமைச்சராக இருந்திருக்கலாம். ஆனால் சுயநல அரசியலை அடியோடு வெறுத்தவர் பிரபாகரன் அவர்கள். போராட்டமே தமிழ் மக்களுக்கான இறுதி முடிவென்று இறுதிவரைக் களம் நின்று போராடியவர்.
தமிழ் மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான ஒரு வழியை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் அரசியலமைப்பை நம்பியிருப்பதில் எவ்வித பயனுமில்லை. ஆயுதக்கட்சிகள் ஒன்றினைந்து ஓர் முடிவை எடுக்க வேண்டும். மீண்டும் சமாதானப் பேச்சுக்களா? இல்லை ஆயுதப் போராட்டமா?
தற்பொழுது அரசாங்கத்தினால் முன்னெடுத்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் தீர்வுத்திட்டங்கள் அனைத்தும் இந்தியாவினுடைய நிகழ்ச்சி நிரலாகவே இருந்து வருகின்றது.இந்திய பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையை அடுத்து ஆயுதக் கட்சியின்மேல் இருந்த சொற்ப நம்பிக்கையையும் இந்திய அரசு இழந்து விட்டது. தற்பொழுது இவர்களை அவர்கள் எதிரியாகவே பார்க்கின்றார்கள்.
முன்னொரு காலத்தில் ஒரு ராஜா ஒரு நாட்டைப் பிடிப்பதற்காக 07 தடவைகள் முயற்சி செய்து அதன் பின்னரே நாட்டைக் கைப்பற்றினார். அதனைப் போன்றே முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, நாலாம் கட்ட ஈழப்போர் நடந்து முடிந்து விட்டது. இனி ஐந்தாங்கட்ட ஈழப்போரினை தொடங்க வேண்டிய நிலையை இவ் ஆயுதக்கட்சிகள் உணரும் வரையிலும் சிங்கள இனத்துடன் வேசையாடிக் கொண்டிருப்பதே இவர்களின் பிழைப்பாக மாறிவிடும்.
அரசியல் நீரோட்டத்தில் தமிழரசுக்கட்சியும் ஆயுத நீரோட்டத்தில் ஏனைய ஆயுதக் குழுக்களும் களமிறங்கினால் என்ன என்பதனைப் பற்றிக் கூடிஆலோசித்து அதனை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது?

மீண்டும் இரத்த ஆறு ஓடும், அழிவுகள் நடக்கும் என்று பாராளுமன்றில் வீரவசனங்களைப் பேசுவதில் பயன் ஏதும் இல்லை. சிங்களவர்களும் தமிழினத்திற்கான தீர்வுகளை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதுமில்லை. சிங்கள அரசியல் இனவாதத்தலைமைகளும் ஒருபோதும் தமிழருக்கான தீர்வைப் பெற்றுத் தரப்போவதில்லை.
இணக்கஅரசியல் என்பது மிகவும் ஆபத்தானதொன்று. தொடர்ந்தும் இவ் ஆயுதக் கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் அரசாங்கத்தின் ஆட்களாக வேலை செய்வதைவிட ஆறு குளங்களில் வீழ்ந்து சாவதே மேல்.
சற்று சிந்தியுங்கள் தமிழ் அரசியல் தீர்வுக்கு அரசியல் போராட்டமா? இல்லை ஆயுதப் போராட்டமா எது சிறந்தது என்று நீங்களே தீர்மானியுங்கள்.

இதுவரையிலான இலங்கையின் அரசியலமைப்பு எதுவும் தமிழர்கள் எதிர்பார்த்த அதிகாரப் பகிர்வை வழங்கியிருக்கவில்லை. இறுதியாக 1978 ஆம் ஆண்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையான அரசியலமைப்பிலும் 1987 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கிணங்கக் கொண்டுவரப்பட்ட பதின் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்விலும் குறைபாடுகள் உள்ளன.

 

அக்குறைபாடுகளுடனான பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தானும் இதுவரை அதாவது ஒப்பந்தம் எழுதப்பட்டு கால்நூற்றாண்டைக் கடந்துவிட்ட நிலையிலும் முழுமையாக அமுல்செய்யப்படவில்லை என்பதும் கடந்தகால அனுபவங்கள், இத்தகையதொரு அனுபவப் பின்புலத்தில்தான் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தைத் தமிழ் மக்கள் நோக்க வேண்டியுள்ளது.

அதிகாரப் பகிர்வு எனும் போது அதிகாரப் பகிர்வு அலகின் வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்ற விடயம் முன்னெழுகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு மொழிவாரி அலகுக்காகவே கடந்த அறுபது வருடகால உரிமைப் போராட்ட அரசியலில் பல தியாகங்களைச் செய்துள்ளனர். பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். எனவே தமிழ் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய அதிகாரப் பகிர்வு அலகு இதுவரை கால வரையிலான இழப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும் அவர்தம் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தும் வகையிலும் அமைவது அவசியம்.

அப்படிப் பார்க்கும் போது உத்தேச அரசியல் யாப்பின் அதிகாரப் பகிர்வின் அலகுகளிலொன்று வடக்கு, கிழக்கு பிரிக்கப்படாத தனிப் பிராந்தியமாக அல்லது தனி மாகாணமாக அமைய வேண்டும். 1988 இலிருந்து 2008 வரை இருபது வருடங்கள் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் தனியான நிர்வாகத்தின் கீழ் எந்த இடர்ப்பாடும் இல்லாமல் இயங்கியது என்பதை இப்போது மனங்கொள்வது அவசியம். ஜே. வி. பி. யினால் தொடரப்பட்ட வழக்கொன்றின் மூலம் வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் 2008 இல் நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்டமை ஒர் அரசியல் விபத்து ஆகும்.

எனவே மேற்கூறப்பட்ட ‘அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழு’ வடக்கு கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களில் மேற்கொள்ளும் அமர்வுகளின் போது தமிழ் மக்களிடையேயுள்ள பொது நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், தொழில் சார் தகைமையாளர்கள், கலை இலக்கிய ஊடக சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்து வடக்கு கிழக்கு பிரிக்கப்படாத ஓர் அதிகாரப் பிகர்வு அலகினை வலியுறுத்த வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்க்கப்பட்டுள்ள அதாவது பதின் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் குறித்துக் குறைபாடுகள் இருந்தாலும் கூட பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தினை முற்றாகப் புறந்தள்ளிவிடாமல் அதனை அடிப்படையாகக் கொண்டே மேற்செல்ல வேண்டும்.

ஜெனீவாத் தீர்மானம் பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை வலியுறுத்தியுள்ளது. தென்னிலங்கை இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைக் கணக்கிலெடுக்கும் போது பதின் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு அதில் உள்ள குறைபாடுகளை உத்தேச புதிய அரசியல் யாப்பில் நிவர்த்தி செய்துகொள்ளுகின்ற பிரேரணைகளே நடைமுறைச் சாத்தியமானவை.

அதிகாரப் பகிர்வு விடயங்களைப் பொறுத்தவரை தற்போதுள்ள பதின் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 2000 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க முன்வைத்த அரசியலமைப்புச் சட்ட மூலம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2006 ஆம் ஆண்டின் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தலைமையிலான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கான நிபுணர் குழுவின் அறிக்கை முதலிய ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்து அவற்றிலுள்ள சாதகமான விடயங்களைத் தொகுத்தெடுத்துப் பிரேரணைகளாக முன்வைக்கலாம்.

அரசியல் கட்சியினர் தங்கள் பிரேரணைகளையும் வரைபுகளையும் முன்வைப்பார்கள். அது ஒருபுறம் நடக்கட்டும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது அரசியல் கட்சிகளின் வேலை என்றெண்ணி அலட்சி0யமாகவும் அசமந்தமாகவும் இருந்துவிடாமல் மிகவும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்வந்து தங்கள் ஆலோசனைகளை எழுத்து மூலமும் வாய் மூலமும் மேற்கூறப்பட்ட குழுவிடம் முன்வைக்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக பின்வரும் சில விடயங்களைக் குறிப்பிடுதல் இப்பத்தியின் நோக்கத்திற்கமையப் பொருத்தம் ஆகும்.

உத்தேச பிராந்தியம் அல்லது மாகாணத்தின் ஆளுநர் நிறைவேற்று அதிகாரம் அற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் பிராந்தியம் அல்லது மாகாணம் தனக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பரப்பில் சுயமாக இயங்க முடியும்.

பிராந்தியங்களுக்கு அல்லது மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரப் பரப்புக்களைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்களும் (அரசாங்க அதிபர்), பிரதேச செயலாளர்களும், கிராமசேவை உத்தியோகத்தர்களும் மாகாண முதலாமைச்சருக்கே பொறுப்புக் கூறுவதாயிருக்க வேண்டும்.

மாநகர சபை, நகர சபை மற்றும் பிதேச சபைகளான உள்ளூராட்சி அலகுகளின் முழு நிர்வாகமும் முழுமையாகப் பிராந்திய அல்லது மாகாண முதலமைச்சரின் கீழேயே கொண்டுவரப்படல் வேண்டும். தற்போதுள்ள அதிகாரங்களை விடக் கூடுதலான அதிகாரங்களை உத்தேச புதிய அரசியல் யாப்பில் வழங்கலாம். உதாரணமாகப் பாலர் பாடசாலைகளின் நிர்வாகம் உள்ளூராட்சிச் சபைகளின் கீழ் கொண்டுவரப்படலாம்

அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக தற்போதைய மாகாண சபைகளுக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்களிலுள்ள குழப்ப நிலை உத்தேச புதிய யாப்பில் களையப்பட்டு அவை தெளிவாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

மத்திய அரசாங்கத்திற்குரிய அதிகாரப் பட்டியல், பிராந்திய அல்லது மாகாணத்திற்குரிய அதிகாரப் பட்டியல் என இரு பட்டியல்களே உத்தேச புதிய யாப்பில் தெளிவாக வரையறை செய்யப்பட்டு உள்ளடக்கப்படல் வேண்டும். அதாவது ‘ஒருங்கியைய நிரல்’ – Concurrent list தவிர்க்கப்படல் வேண்டும்.

தேசிய நீர்ப்பாசனம் – National Irrigation, தேசிய நெடுஞ்சாலைகள் – National Highways, போன்றவை குறித்த தெளிவான வரைவிலக்கணங்கள் உத்தேச யாப்பில் வகுக்கப்படல் வேண்டும்.

பிராந்திய சபை அல்லது மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிந்தாலொழிய அல்லது அதனைக் கலைக்கும்படி அச்சபை மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் தீர்மானித்தாலொழிய பிராந்திய சபை அல்லது மாகாண சபை ஆளுநரினாலோ அல்லது ஜனாதிபதியினாலோ கலைக்கப்படல் ஆகாது.

மொத்தத்தில் தற்போதுள்ள பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் உத்தேச புதிய அரசியல் யாப்பில் செறிவாக்கப்பட வேண்டுமே தவிர ஐதாக்கப்படக்கூடாது.

தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள இச் சந்தர்ப்பத்தினை அதி உச்சமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் செயற்படும் பொது அமைப்புக்கள் யாவும் இது விடயமான விழிப்புணர்வை மக்களுக்கு இப்போதிருந்தே தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

அடுத்தபடியாக நாம் சிந்திக்க வேண்டியது உத்தேச அதிகாரப் பகிர்வு அலகுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் பற்றியதாகும்.

 

SHARE