உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? இதனை செய்திடுங்கள்

14

நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்களின் மூலமாக உடல் எடையை எளிதாக அதிகரிக்கலாம்.

உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் சில பழவகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தங்களது உடல் எடையை அதிகரிக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழமானது உடல் எடையை குறைக்கவும், அதிகரிக்கவும் பயன்படும். உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் வாழைப்பழத்தை உணவில் சேர்த்து வந்தால், அவர்களது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு சீரான தன்மைக்கு வரும். இதன்மூலம், உடல் எடை குறையும்.

அதேபோல், வாழைப்பழத்தில் அதிகளவில் கலோரிகள் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது.

அத்திப்பழம்

ஒரு அத்திப்பழம் 111 கலோரிகளை கொண்டதாகும். எனவே, தினமும் இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், உடல் எடையும் அதிகரிக்கும்.

அவகோடா பழம்

அவகோடா பழத்தில் நல்ல கொழுப்புகள் அதிகளவில் உள்ளன. மேலும், 322 கலோரிகள் இதில் அடங்கியுள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இதனை உட்கொள்ள வேண்டும். இந்த பழம் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது.

பருப்பு வகைகள்

வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகளில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகளவில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க இவை உதவுகின்றன.

மேலும், இந்த பருப்பு வகைகளில் புரதச்சத்து உள்ளதால், உடலுக்கு உரத்தை அளிக்கின்றன. தினமும் சிறிதளவு உலர் பழங்களை எடுத்துக் கொள்வதும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளன. எனவே இந்த பழத்தை உண்ணும் போது நமது உடல் ரத்தம் அதிகரிக்கும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். எனவே மாம்பழத்தை உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் தவறாமல் உண்ண வேண்டும்.

SHARE