விபத்தில் சிக்கி ஒருவர் பலி

88

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் பண்டகாரவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நேற்றிரவு 10.30 மணியளவில் அனுராதபுரம் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியோன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதிய குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளின் சாரதி 33 வயதுடைய சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அத்துடன் லொறியின் சாரதியை கைதுசெய்த பொலிஸார் அவரை சிலாபம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE