அதிகமாக டீ குடித்தால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?

96

தற்போது உள்ள காலக்கட்டத்தில் டீ என்பது பெரும்பாலான மக்களிடம் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் தலைவலி என்றால் ஒரு டீ குடித்தால் சரி ஆகிவிடும், தூக்கம் வருகிறது என்றால் அதற்கும் டீ, இப்படி பல காரணங்கள் சொல்லி அதிகமாக டீ குடிக்கப்படுகிறது.

டீ உடல்நலத்திற்கு ஆரோக்கியமான ஒன்று தான், ஆனால் அதுவே அதிகளவு குடித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

  • அதிகளவில் டீ குடித்தால் கபைன் நச்சுக்கள் உங்களை அடிமையாக்கிவிடும். இதனால் கவனச்சிதறல், அமைதியின்மை, நிலையில்லா தன்மை, மற்றும் உறக்க பழக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவை ஏற்படும்.
  • அதிகளவில் டீ குடிப்பதால், கீமோதெரபி மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் உடலில் சென்று வேலை செய்வதை தடுக்கும். இதனால் அந்த மருந்தால் நோயை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
  • சராசரியாக ஒருநாளைக்கு மூன்று அல்லது ஐந்து கப் டீ குடிப்பது சரியான அளவாகும். இதற்கு அதிகமாக டீ குடிப்பது அவரவரின் உடல் நிலையை பொறுத்து மாறுபடும்.
SHARE