ரியாத்- மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கியது, பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை

35
ரியாத்- மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கியது, பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை
ரியாத்- மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கியது.
சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் இருந்து 142 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் மும்பைக்கு   B737-800 என்ற விமானம் புறப்பட தயாரானது. இந்த விமானம், டேக் ஆஃப் ஆவதற்காக, ஓடுபாதையில் சீறிப்பாய்ந்த போது, விமானம் சறுக்கியது.
இதனால், உடனடியாக டேக் ஆப் செய்வது நிறுத்தப்பட்டு விமான நிலையத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டது.  இந்த சம்பவத்தில், விமானத்தில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ்  தெரிவித்துள்ளது.
SHARE