இங்கிலாந்து மண்ணில் கோஹ்லி படைத்த சாதனை

107

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில், ஆயிரம் ஓட்டங்களை கடந்த 13வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வீராட் கோஹ்லி.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வரும் நிலையில், 23 ஓட்டங்களை கோஹ்லி எடுத்த போது 1000 ஓட்டங்களை கடந்த 13வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படும் கோஹ்லி, இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனம் இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோஹ்லியின் ஆட்டம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE