கோலியை ஆட்டமிழக்கச்செய்யும் கனவுடன் உறங்கப்போகின்றோம்- அன்டர்சன்

54

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கான தடையாக விராட் கோலி மாத்திரமே காணப்படுகின்ற நிலையில் அவரை இன்று காலையில் விரைவில் ஆட்டமிழக்கசெய்யமுடியும் என்ற கனவுடனேயே இங்கிலாந்து வீரர்கள் உறங்கசெல்வார்கள் என நேற்றைய நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வெற்றிபெறுவதற்கு இன்னமு; 84 ஓட்டங்கள் தேவையாகவுள்ள உள்ள நிலையில் அணி ஐந்து முக்கிய விக்கெட்களை இழந்துள்ளது.

இந்திய அணித்தலைவர் விராட் கோலி மாத்திரம்  அணியின் நம்பிக்கையாக ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்த நிலையிலேயே ஆன்டர்சன் கோலியை உடனடியாக ஆட்டமிழக்க செய்வது குறித்த கனவுடன் நாங்கள் உறங்கச்செல்வோம் என அன்டர்சன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஐந்து விக்கெட்களை விரைவாக வீழ்த்த வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் தங்கள இலக்குகளை அடைந்து விடுவார்கள் என தெரிவித்துள் அன்டர்சன் இன்று முதல் 15 ஓவர்களில் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் எனவும் குறி;ப்பிட்டுள்ளார்.

இது மிகவும் சுவாரஸ்யமான தருணம் வெற்றிக்காக நாங்கள் விசேடமாக எதையாவாது செய்யவேண்டும் என்பது சுவாரஸ்யமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி ஸ்லிப்பில் கட்ச்களை தவறவிடுவது குறித்தும் தெரிவித்துள்ள அவர் இந்த விடயம் சமீபகாலங்களில் அணிக்கு பிரச்சினையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

SHARE