மஹிந்த முக்கிய தலைவருடன் இந்தியா விஜயம்! காரணம் என்ன?

28

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்தியாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்றே, அவர் அங்கு செல்லவுள்ளார்.இந்தியா செல்லும் மஹிந்த ராஜபக்ஷ, பொது நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை- இந்திய உறவுகள் பாதிப்படைந்துள்ள நிலையில், அதனை சீர்செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவினை மேம்படுத்த, மஹிந்த ராஜபக்ஷவுடனான உறவினை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE