ட்ரம்பால் ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்து- ஐ.நா நிபுணர்கள்!

98
Image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களிற்கு எதிராக வன்முறைகளை தூண்டும் விதத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார் என ஐநா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலோபாயரீதியிலானவை அவை பத்திரிகை சுதந்திரத்தை அலட்சியம் செய்கின்றன என ஐ.நா நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து சுதந்திரம் தொடர்பான ஐநாவின் நிபுணர்களான டேவிட் கே,எடிசன் லன்சா ஆகியோரே இந்த கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

பத்திரிகை சுதந்திரம் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியவை குறித்த அமெரிக்காவின் சர்வதேச கட்டுப்பாடுகளிற்கு எதிரானவையாக டிரம்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் ஊடகங்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள தருணத்திலேயே ஐநா இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை தேசப்பற்று இல்லாதவர்கள் என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் நியுயோர்க் டைம்ஸ்உட்பட பல பத்திரிகைகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றார்.

டிரம்பின் ஆதரவாளர்களும் இதேபோக்கை பின்பற்றுகின்றனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

SHARE