சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

67
சதா படத்துக்கு ‘ஏ’  சான்றிதழ்
நடிகை சதா நடித்துள்ள டார்ச் லைட் படத்துக்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.
‘ஜெயம்’ படத்தில் அறிமுகமான சதா, அந்நியன், பிரியசகி, வர்ணஜாலம், திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார். பின்னர் இந்தி, தெலுங்கு பக்கம் போனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘டார்ச் லைட்’ என்ற தமிழ் படத்தில் விலைமாதுவாக நடித்துள்ளார். இந்த படத்தை மஜீத் இயக்கி உள்ளார்.
படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது சதா நடித்துள்ள காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக கூறி சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். பின்னர் மேல் முறையீடு செய்து யு அல்லது யுஏ சான்றிதழ் அளிக்கும்படி படக்குழுவினர் போராடியும் கிடைக்கவில்லை. ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதுகுறித்து டைரக்டர் மஜீத் கூறியதாவது:–
‘‘1990 காலகட்டத்தில் நடிக்கும் கதையாக ‘டார்ச் லைட்’ உருவாகி உள்ளது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை பற்றிய கதை. இந்த படத்தின் கதையை கேட்ட நடிகைகள் பலரும் நடிக்க தயங்கினார்கள். சதா மட்டும் தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டார். வறுமையை பயன்படுத்தி பெண்கள் வாழ்க்கையை இந்த சமூகம் எப்படி படுகுழியில் தள்ளி பாழாக்குகிறது என்பதை படத்தில் சொல்லி இருக்கிறோம்.
இந்த படத்துக்கு இங்கு தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டனர். போராடி பார்த்தும் பயன் இல்லாததால் மும்பைக்கு சென்று ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளோம். ரித்விகா, உதயா, தினேஷ்குமார், ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
SHARE