சிறப்பாக இடம்பெற்ற மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா 

40
மன்னார் நகர் நிருபர்   
தேசிய இளைஞர்  சேவைகள் மன்றம் வருடா வருடம் நடத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவிற்காக பங்கு பெருநர்களை தெரிவு செய்யும் நிகழ்வின் இரண்டாவது கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் 30 வது இளைஞர் விளையாட்டு விழாவானது நேற்று காலை 10 மணியளவில் மன்னார் பொது மைதானத்தில் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.மஜித் தலைமையில் ஆரம்பமானது.
தேசிய இளைஞர் சேவை மன்றமும் மன்னார் மாவட்ட சம்மேளனமும் இணைந்து பிரதேச ரீதியில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளை தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யும் முகமாக குறித்த விளையாட்டு விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.பூலோகராஜாஒழுங்கமைப்பில் தேசிய பிரதி நிதி ஜோசப் நயன் தலைமையில் குறித்த விளையாட்டு விழா மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களிலும் உள்ள இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைத்து குறித்த விளையாட்டு விழா இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் சேவை மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் திரு.N.M.முனவர் அவர்களும், மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.A.மஜித் அவர்களும், மன்னார் நகர சபை உறுப்பினர்களான திரு.ஜோசப் தர்மன், திரு.ரெட்ணசிங்கம் குமரேஷ், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் திரு.மரிய சீலன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். விசேட விருந்தினர்களாக திரு S.R.லேம்பெர்ட் மற்றும் திரு.அற்புததாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மன்னார் மாவட்த்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த 150 மேற்பட்ட  ஆண், பெண் போட்டியாளர்கள் இவ் விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி கிண்ணங்களை மற்றும் சான்றிதழ்களை பெற்றுகொண்டனர். குறித்த மாவட்ட விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணைத்து வீரர் வீராங்கனைகளும் வருகின்ற மாதங்களில் நடைபெற இருக்கின்ற தேசிய மட்ட விளையாட்டு விழாவில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE