கலிபோர்னியாவில் ஷாப்பிங் சென்டர் அருகே விமானம் மோதி விபத்து; 5 பேர் பலி

28

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஷாப்பிங் சென்டர் அருகே சிறிய ரக விமானம் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டா அன்னா நகரில் ஷாப்பிங் சென்டர் ஒன்று உள்ளது.  இந்த நிலையில் கன்கார்டுக்கு உட்பட்ட ஈஸ்ட் பே புறநகர் பகுதியில் இருந்து 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

அது திடீரென அவசரமுடன் தரையிறங்க முற்பட்டு உள்ளது.  இதில் ஷாப்பிங் சென்டர் அருகே இருந்த வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த விபத்தில் தரை பகுதியில் இருந்தவர்கள் யாரும் காயமடைந்து உள்ளனரா? என்பது பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.

இதனை அடுத்து உடனடியாக அங்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது.  இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையை தொடங்கி உள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு முடிவு செய்யும்.

SHARE