ரெலோவில் இருந்து விலகினார் – கணேஸ்வரன் வேலாயுதம்!

 

ரெலோவில் இருந்து விலகினார் – கணேஸ்வரன் வேலாயுதம்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) என்ற கட்சியில் இதுவரை காலமும் உறுப்பினராக இருந்த கணேஸ்வரன் வேலாயுதம் ஆகிய நான் 02.08.2018 ஆம் திகிதியிலிருந்து அக்கட்சியிலிருந்து விலகியுள்ளேன். இவ் அறிவித்தலை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன்.

மக்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் கட்சியிலிருந்தவாறு என்னால் முழுமையாக பூர்த்தி செய்யமுடியவில்லை. இனிவரும் காலங்களில் மக்களின் தொழில் முயற்சிகள் கல்வி விளையாட்டுதுறை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு சமூகசேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

அத்துடன் இலாபநோக்கமற்ற சமூகசிந்தனை சார்ந்த ஆர்வலங்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தால் நாம் புதியதோர் கட்சியினை ஆரம்பித்து மகாணசபையின் ஊடாக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். எனவே சமூகசிந்தனையாளர்களும் ஆர்வலர்களும் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.

About Thinappuyal News