வடக்கில் வீட்டை கட்டித்தருவது இந்தியாவா சீனாவா என்ற போட்டி நிலவுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் செல்வபுரம் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வீடுகளை கட்டிக்கொடுக்கும் வேலையை மற்ற அமைச்சர்கள் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை குறைந்துபோயுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளை கட்டித்தருவது இந்தியா சீனா என்ற போட்டி அமைச்சரவையில் நிலவுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகள் சென்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களால் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி எதுவும் ஏற்படவில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசா மாத்திரம் எங்கள் பகுதிகளில் வீடுகளை அமைத்து தருகின்றார். ஏனைய அமைச்சர்கள் செய்து தருவதாக சொல்கின்றார்கள் அது வாய்மொழி பேச்சாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் பாராம்பரிய நிலங்களை அமைப்பதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவில் 60 அடி விகாரையை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொக்குளாய் கொக்குதொடுவாய், போன்ற தமிழர்களின் எல்லை கிராமங்கள் மகாவலி எல்லை வலயத்தில் அபகரித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.