விசா இன்றி இலங்கை வரமுடியும்…! மகிழ்ச்சியில் இந்தியர்கள்

34

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பரிசீலனை செய்வதற்கு சுற்றுலாத்துறையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில், விரைவில் இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள், இலங்கைக்கு விசா இன்றி வந்து செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE