தொடரிலிருந்து வெளியேறுகிறார் டூப்பிளஸ்ஸி

136

தென்னாபிரிக்க அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியின் வலது தோள் பட்டையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான இறுதி இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மெஹமட் முசாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது தென்னாபிரிக்க அணி வீசிய 10 ஓவரில் பிடியெடுப்பு ஒன்றுக்கான முயற்சியொன்றை மேற்கொண்டபோது அவர் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வலது தோல்பட்டை பாதிப்புக்குள்ளானதில்.

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைக்களுக்குப் பின்னர் மருத்துவர்கள் அவரை ஆறு வாரங்களுக்கு முழுமையாக ஓய்வு பெறுமாறு அறிவித்துள்ளனர். இதன் காரணாகவே அவர் இலங்கைக்கு எதிராக மீதமுள்ள இரு ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட முடியாது போயுள்ளது.

இந் நிலையில் மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளுக்கு தென்னாபிரிக்க அணியின் அணித் தவைர்களாக டீகொக், ஹஸிம் அம்லா மற்றும், மர்க்ரம் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE