தீனாக் குழுவை அன்று விடுதலைப் புலிகள் மிகக் கச்சிதமான முறையில் கட்டுப்படுத்தினார்கள். அவ்வாழியையே இன்றும் ஆவா குழுவை வழிநடத்தியவர்கள் கையாண்டுள்ளனர்.

98

 

யுத்தம் முடிவடைந்து மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பிக்கொண்டிருக்கம் நிலையில் யாழ் குடாநாட்டில் அடாவடிக் குழுவினரின் செயற்பாடுகள் உச்சம் பெற்றுள்ளன. இதன் காரணமாக மக்கள் மீண்டும் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். பணம் கொடுத்து ஒருவர் ஏவிவிட தாக்குதல்கள், வாள்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து என பல சம்பவங்கள் இவ்வாறான குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவருகின்றன. இவ்வாறு ரவுடித்தனம் செய்யும் குழுக்களுக்கு தனித்தனிப் பெயர்களும் உண்டு. ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் தட்டாதெரு கன்னாதிட்டிப் பகுதிகளை மையமாக வைத்து தீனா குழு என்றதொரு குழுவை விடுதலைப்புலிகள் இயக்கி வந்தனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித்தின் தீனா படம் வெளியாகிய காலத்தில் இது பிரபல்யமாக இருந்தது. அதுபோலவே தற்போது குடாநாட்டை அச்சுறுத்திவரும் குழுக்களில் ‘ஆவா ‘ குழு பரபலியம் பெற்றுள்ளது. உலகில் வலிமையுள்ளவர்கள் சொல்லுவதுதான் சட்டமாக உருவெடுக்கின்றது. இதனால் எளியவர்கள் நசுங்குவதும் எழுதப்படாத விதியாகவே. அனால்லும் தீனா குழு மற்றும் ஆவாக் குழு ஆகியவற்றின் உருவாக்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு அதிகாரம் உள்ளவர்களின் மறைமுக நடவடிக்கைகளுக்காகவே அமைந்திருந்தது. அவர்கள் தமது நோக்கங்களை மேற்கொண்டுவந்திருந்த வேளைகளில் குறித்த இரு குழுக்கழும் அவர்களது கைமீறி செயற்பாடுகளை மேற்கொள்ள தொடங்கின. இதனால் தீனாக் குழுவை அன்று விடுதலைப் புலிகள் மிகக் கச்சிதமான முறையில் கட்டுப்படுத்தினார்கள். அவ்வாழியையே இன்றும் ஆவா குழுவை வழிநடத்தியவர்கள் கையாண்டுள்ளனர்.

அதாவது புலிகள் தீனா குழுவை கட்டுப்படுத்த அன்று இராணுவத்தினர் மீது தாக்குதல்களை தீனா குழுவைச் சேர்ந்தவர்களை கொண்டு மேற்கொண்டனர். இதனால் இராணுவத்தினர் அன்று மிகவேகமாக தீனாக் குழுவை கொன்று குவித்தனர். அதுமட்டுமன்றி கைது செய்து சிறைகளிலும் அடைத்தனர். இதன்மூலம் தீனா குழுவின் செயற்பாடுகள் குடாநாட்டில் அடியோடு மறைக்கப்பட்டது. அதுபோலவே கடந்த ஆட்சியில் தென்னிலங்கை அரசியல் வாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் ஆவா குழு என சொல்லப்படுகிறது. ஆவா குழுவை கொண்டு அதனை இயக்கியவர்கள் தமது செயற்பாடுகளை மிக துல்லியமாக குடாநாட்டில் செய்துகொண்டிருந்தனர். “ஆவா” குழுவும் தீனா குழு போல இயக்கியவர்களது கைநழுவிச்செல்ல தொடங்கியது. இதனால் ஆவாக் குழுவை கட்டுப்படுத்த அதன் ஏற்பாட்டாளர்களே பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்கதல்களை மேற்கொள்ள செய்தனர். இதன் விளைவுகளால் இன்று குடாநாடு கலாசாரத்தில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் சரிவுநிலைக்கு சென்றுவிட்டது. அத்துடன் அவமானங்களையும் சுமக்கவேண்டிய நிலைக்கு யாழ்ப்பாணம் வந்தவிட்டது. ஆரம்பத்தில் குழுவாகச் சேர்ந்து அடித்து நொறுக்கி பதற்றத்தை உருவாக்குவதே இவர்களின் தொழில். இதற்க இவர்களுக்கு ஓரளவு பணம் வழங்கப்பட்டது. குற்றவாளிகள் அகப்பட்டால் வெளியெ வர யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சட்டத்தரணிகள் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர் என்பது தான் அவர்களின் பலம். அத்துடன் கண்ணியமாக வாழ நினைக்கும் குடிமக்கள் இத்தகையோரின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அச்சம் கொண்டனர். வட்டுக்கோட்டையை ஆட்சி செய்வது தில்லு குழு. கடந்த வருடம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தை இரு மணிநேரம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இறுதியில் வேறு இடங்களில் இருந்து வந்த பொலிஸார்தான் நிலைமையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்பதும் பலருக்கு தெரியாத விடயம். மானிப்பாயைத் தளமாகக் கொண்டது கிருஸ்ணா குழு. சுன்னாகத்தைத் தளமாகக் கொண்டது சானா குழு. இவ்வாறான குழுக்கள் தோன்ற அடிப்படையாக உள்ளது என்ன? என்று ஆராய்ந்த போது லீசிங் வழங்கும் நிறுவனங்களே அடிப்படையாக அமைந்துள்ளன என்ற உண்மை தெரியவந்தது.

ஆரம்பத்தில் தமக்கு ஒழுங்காகப் பணம் கட்டாதோரிடம் பறித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்த நிறுவனங்கள் தரகர்கள் மூலம் இவர்களை அணுகினர். ஓரிரு நடவடிக்கைகளுக்குப் பின் இவர்களே நேரடியாக நிறுவனங்களுடன் தொடர்பைப் பேணுவார்கள். குறிப்பிட்ட சில மணிநேரங்களில் இந்தப் பறிமுதல் நடவடிக்கை முடிவடைந்து விடும் இதுதான் இவர்களின் பணியாக இருந்தது. இதற்காக பல ஆயிரம் ரூபா பணம் பியர் ரின் சாப்பாடு போன்றவைகளும் சில சந்தர்ப்பங்களில் கிட்டுவதுண்டு. வயலில் வரம்பு கட்டினாலோ மேசன் வேலைக்குப் போனாலோ கிடைப்பது ஆயிரத்தை விடக் கொஞ்சம் கூடத்தான். மோட்டார் சைக்கிள் கைத்தொலைபேசி சகிதம் நடத்தும் இந்தத் தொழிலுக்குக் கிடைப்பதோ பல ஆயிரம். அதனால் தான் தங்களது பிள்ளைகள் நோகாமல் உழைக்கும் இந்தத் தொழிலில் ஈடுபடுவது குறித்து யாழ்ப்பாணத்து பெற்றோர்கள் அக்கறைப்படவில்லை.அத்துடன் இவர்களது மோட்டார் சைக்கிள்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் பெயரிலேயே இருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. முதலில் லீசிங் குழு மூலம் பிரபல்யமடையும் இக் குழுக்கள் பின்னர் கட்டப்பஞ்சாயத்து கூலிக்குத் தாக்குதல் கொலை என நாளடைவில் வளர்ச்சி பெற்றன.இதனை தமக்க சாதகமாக பயன்படுத்திய தென்னிலங்கை தமது செய்றபாடுகளை இவர்களைக்கொண்டு மிக கச்சிதமாக அரங்கேற்றினார்கள். வீதிக்கு வீதி சந்திக்குச் சந்தி நின்று குடும்ப உறுப்பினர்கள் பிள்ளைகளுடன் வருவோரை மறித்து சாரதி அனுமதிப் பத்திரம் வாகன அனுமதி முதலானவற்றைப் பரிசீலிக்கும் போக்குவரத்துப் பொலிஸார் தலைக்கவசம் இன்றியும் ஒரு மோட்டார் சைக்கிளில் பக்கம் பக்கமாக தலா மூன்று பேர் கையில் தடி பொல்லு வாள்களுடன் வரும் இக் குழுவினர் வரும் போது புது மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது போல் வானத்தைப் பார்த்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்று விடுகின்றனர். இதை பார்த்த காட்சிகள் பல உண்டு. நேருக்கு நேர் பார்த்தால் அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டி வருமோ என்னமோ ?

இவர்களது செயற்பாடுகள் இக் குழுக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது போல் அமைவதுண்டு.  இதைவிட மோசமான சம்பவமாக யாழ் பல்கலைக்கழக மாணவிகளை அச்சுறுத்திம் இக்குழுவினர் அவர்களது கற்புகளையும் சூறையாடிவருவதாக தற்போது தகவல்கள் கசிந்துவருகின்றன. இவ்வாறான அழிவுகளுக்கம் கலாச்சார பிறழ்வுகளுக்கும் தூண்டப்பட்ட இவர்கள் தற்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கைவைக்க தொடங்கியதால் அவர்களை அழிக்கவேண்டிய கட்டாயம் இவர்களை இயக்கியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடே தற்போது குடாநாட்டில் இராணுவப்பிரசன்னம் மற்றும் வகைதொகையற்ற கைது என தொடர்கின்றது. ஆனாலும் அச்சம்பவங்களை எல்லாம் ஏதோ ஒருவகையில் திட்டமிட்டு அரங்கேற்றி குடாநாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக மாற்றி குறித்த நபர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் என்பதே வெளிப்படை உண்மை.

விடுதலைப் புலிகள் தீனா குழுவை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேறியதன் பின்னர் அக் குழுவை அழிக்க எவ்வாறு ஒரு களத்தை உருவாக்கினார்களோ அதேபோன்றதொரு களத்தைத்தான் இன்று ஆவா குழுவை உருவாக்கியவர்களும் களத்தை உருவாக்கி அப்பாவி இளைஞர்களை தறுதலைகளாகவும் கொலைகாரராகவும் கொள்ளைக்காரராகவும் பொம்பிளைப் பொறுக்கிகளாகவும் மாற்றி கைதுசெய்து சிறையிலடைக்கின்றனர்.

ஆக, உருவாக்கி கத்தியைகொடுத்தவர்களே நம்பிக் கத்தியை எடுத்தவர்களை கொலைக்களத்தில் நிறுத்தி கொல்கின்றனர். இதுதான் உண்மையும்கூட.

SHARE