பூகம்பத்தின்போதும் இமாம் என்னும் ஒருவர் தொடர்ந்தும் தொழுகையை நடத்திய வீடியோ ஒன்று சமூகதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

40

இந்தோனேசியாவில் பூகம்பம் ஏற்பட்டபோது இமாம் என்னும் ஒருவர் தொடர்ந்தும் தொழுகையை நடத்திய வீடியோ ஒன்று சமூகதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பூகம்பத்தின்போது பாலி நகரித்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்த இமாமின் மனஉறுதி கண்டு பலரும் பாராட்டியுள்ளனர்.

பள்ளிவாசல் கட்டடம் அதிரும்போது இமாம் தொழுகை நடத்துவதை ஏதேச்சையாக தனது கைபேசியில் பதிவு செய்துகொண்டிருந்த ஒருவர் பூகம்பம் ஏற்பட்டபோது இமாம் கண்கள் திறக்காததைப் பார்த்து தானும் அங்கேயே நின்று வீடியோ எடுத்தார்.

அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பதிவு செய்த அந்த நபர், “இந்தக் காட்சியைப் பார்த்த எனக்கு அழுகை வந்துவிட்டது. பூகம்பத்தின்போது தொழுகையை விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கூட, இமாம் தன் கண்களைக்கூட திறக்கவில்லை. சிறிது நேரத்தில் நிலநடுக்கம் நின்றுவிட்டது” என்று நெகிழ்ந்துள்ளார்.

அந்த வீடியோ காட்சி பகிரப்பட்ட சில நிமிடங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

https://youtu.be/bS-yE4Byb94

SHARE