ஜப்பான் டோக்கியோவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் 2500க்கும் அதிகமான இரண்டாம் உலகப் போர் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு.

1,400 துப்பாக்கிகள், 1,200 வாள்கள், 302 தோட்டாக்கள், 8 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பாடசாலை வளாகத்தில் புதைந்துகிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணியின் போது அவை தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் துருப்பிடித்திருந்ததாகவும், அதைத் திரும்பப் பயன்படுத்த முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய ஆயுதங்கள் அவ்வப்போது ஜப்பானிய நகர்களில் கண்டுபிடிக்கப்படுகின்றன.

About Thinappuyal News