இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில், கருணாநிதியின் மறைவை கேட்டு மகத் கண் கலங்குகிறார். இதனையடுத்து, டேனியல் கலைஞரின் பிரபலமான வசனத்தை பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து பாலாஜி, தமிழ் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது அந்த கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் தான் என கலைஞரை குறிப்பிட்டு பேசுகிறார்.