சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதற்கான தீவிர வேலைத்திட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள்

47
இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விதிமீறல்கள் தொடர்பில்  பிரித்தானியா Ellesmere Port and Neston தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Justin Madders அவர்களுக்கும்  நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த ஆகஸ்ட்  மாதம் 07ம் திகதி   23 Whitby Road, Ellesmere Port, CH65 8AA என்ற முகவரியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் மதியம் 12:30 மணியளவில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
 
நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூக நலன் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் நெறிப்படுத்தலில்ஊடக செயற்பாட்டாளரான சொர்ணலிங்கம் யதுர்சன், நுஜிதன் இராசேந்திரம் , ரெசோக் தியாகலிங்கம் , கிருபானந்தன் வேல்நாயகம் ஆகியோர் கலந்துகொண்ட குறித்த சந்திப்பில் இலங்கையை சர்வதேச நீதிமன்ற விசாரணை கொண்டுசெல்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரை செய்வதற்கான காரணிகளும் ஏன் சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையை பரிந்துரைக்க வேண்டும் என்பது பற்றிய மனுவும் கையளிக்கப்பட்டதுடன் ஐ. நா  மனித உரிமை சபையினால் இலங்கையின் இணக்கப்பாட்டுடன் கொண்டுவரப்பட்ட 30/1 ,34/1 தீர்மானங்களானது   எந்தளவிற்கு இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது பற்றி ஆய்வுசெய்யப்பட்டு  அது தொடர்பான (TGTE MAP) அறிக்கையும் வழங்கப்பட்டது.  
 
இறுதியில்  எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் இந்த விடயம் தொடர்பாக கேள்விகளை முன்வைப்பதாகவும், பாரளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பான விவாதம் ஒன்றிற்கு ஒழுங்கு செய்வதாகவும், அத்துடன் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்வதற்கு Justin Madders  பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE