கியாரே… விஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா?

26

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு கியாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. விஜய் இப்போது சர்கார் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். ஏஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

சர்கார் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் அட்லி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்வதில் அட்லி ஈடுபட்டுள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கியாரா அத்வானி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி திரைபப்படத்தில் நடித்தவர். மேலும், மகேஷ் பாபுவின் பரத் ஆனே நேனு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரீஸிலும் நடித்துள்ளார்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமனை ஒப்பந்தம் செய்யப்போவதாக தகவல் வெளியான நிலையில், கதாநாயகி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது

SHARE