தமிழகத்தில் வசித்து வரும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோருக்கு 1000 சூரியசக்தி மின்சார வசதிக்கொண்ட வீடுகளை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கே இந்த வசதி கிடைக்கவுள்ளது.
இது தொடர்பில் நேற்று சட்டசபையில் தமிழக அரசாங்கம் அறிவித்தலை விடுத்தது. இதன்படி குறித்த மக்களுக்கு 20ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இந்த மக்களுக்கு சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் இந்த வசதிகள் கிடைப்பதாக மாவட்ட பணிமனை தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வியட்நாம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
எனினும் இருநாட்டு உடன்படிக்கையின்படியே இலங்கை தமிழர்களுக்கு இந்த வீட்டு வசதி செய்துக்கொடுக்கப்படவுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பெருந்தோட்டங்களில் சுமார் 60ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.